தமிழ்

சூரிச்சில் மகளிர் பேரணி சனிக்கிழமை 18.03.2017 இல் இடம்பெறுகின்றது.

சூரிச் நகரின் ஊர்வலம் ஆரம்பிக்குமிடமான Helvetiaplatz இல் பி.ப 1.30 மணிக்கு எல்லோரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மகளிர் பேரணி என்பது வாஷின்ட்டனில் ஜனவரி  21 ம் திகதி இடம்பெற்ற மகளிர் பேரணி போல  சர்வதேச மகளிர்  மற்றும் மனிதவுரிமை போராட்டத்தில் ஈடுபாடு கொள்வதை நோக்காக கொண்ட   ஒரு  சகோதரிகளின் பேரணியாகும் . தற்போதைய காலத்தில் சுவிஸிலும் ஐரோப்பாவிலும் வலதுசாரிகள் வலுப்பெறுவதை எதிர்த்தும் அமெரிக்காவில் அதிபர்  ட்ரம்பின் போக்கினால் மனித உரிமைக்கும் உலக சூழலுக்கும் ஏற்படவிருக்கும் பாதிப்பையும் எடுத்துக்கூறி அதற்கெதிராக எமது போராட்டத்தை அறிவிக்க  வீதியிலே ஊர்வலம் போகின்றோம். வலதுசாரிகளின் இந்த அரசியல் கோட்பாடு பாலியல்ரீதியான இனரீதியான பாரபட்சங்களை இன்னும் அதிகரிக்கின்றது. சமூகத்தில் பொருளாதார மேடுபள்ளங்களை அதிகரிக்கின்றது.மதம், மனிதர்களை,குறிப்பாக. அவர்களின் வயது  மற்றும் அங்கவீன அடிப்படையில் புறந்தள்ள ஊக்குவிக்கின்றது . இதற்கெதிராக நாங்கள் மனிதர்கள் எல்லோரினதும் உரிமைக்காகவும்  கண்ணியமான  சுதந்திர வாழ்விற்காகவும் ஊர்வலமாக போகின்றோம். இந்த  சூரிச் மகளிர் பேரணியானது இதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெண்கள் இயக்கம் மற்றும் பெண்கள் போராட்டத்துடன்  தமது ஒற்றுமை உணர்வை  வெளிப்படுத்துகிறது.

இந்த மகளிர் பேரணி மார்ச் 18. இல்  இந்த பாதாதைகளை தாங்கி வீதியில் போராடும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் இயக்ககங்களினால் முன்னெடுக்கப்படும்.  இதன் மூலம்,   இதற்கு  உங்கள் ஆதரவை வெளிஉலகத்திற்கு  காண்பிப்பதற்கும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஊக்குவிற்பதற்கும்  , உங்கள் ஒற்றுமை உணர்வை  வெளிப்படுத்தவும்  உங்களை அனைவரையும் அறைகூவி அழைக்கின்றோம்.

இந்த மகளிர் பேரணிக்கு ஒரு முகம் மாத்திரமில்லை, இதற்கு இன்னும் பல முகங்கள் இருக்கின்றன.

இதை ஒழுங்கு செய்யும் எமது குழுவானது தனிநபர்களை கொண்டு உருவானது. இந்த தனிநபர்கள்   இயக்கங்களுடன்  தொடர்புடைய அல்லது இயக்கங்களுடன் தொடர்பில்லாத நபர்களாவர்.  எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த ஊர்வலம் இடம்பெறுவதற்கான  ஏற்பாடுகளை செய்கின்றோம். எமது ஏற்பாட்டுக்குழு

பத்திரிக்கைகளுக்காக   எவ்வித கருத்தையும் தெரிவிக்காது.  கட்டுப்பாட்டுடன்  நடந்து மிகுந்த  கருத்துக்களை  பிரதிபலிக்கும் வலுவான அமைதிப்  பேரணியை செய்து காட்டுவோம்  என்பதில் பெருமகிழ்ச்சி  கொள்கிறோம்.

சிறிய /பெரிய நிதி அன்பளிப்புகள் வரவேற்கப்படுகின்றன :
Women’s March Zürich, Bern
IBAN: CH00 0000 0000 0000 0000 0